பாலிவுட் கான்களையும், கபூர்களையும் விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத்

Spread the love

கான் நடிகர்களின் படங்களில் நடிப்பதால் மட்டுமே ஹீரோயின்கள் வெற்றிப் பெற முடியாது என நடிகை கங்கனா ரனாவத் பேசியிருக்கிறார்.

பரபரப்பு பேச்சுகளுக்குப் பஞ்சமில்லாதவர் நடிகை கங்கனா ரனாவத். இவரது நடிப்பில் ‘எமெர்ஜென்சி’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதனால், படம் தொடர்பாக பாலிவுட் ஊடகங்களில் இவர் கொடுத்து வரும் பல பேட்டிகள் கவனம் ஈர்த்து வருகிறது. இதில் கங்கனா ஏன் கான், கபூர் படங்களில் நடிப்பதில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “பாலிவுட்டில் உள்ள கான்களும் கபூர்களும் அன்பானவர்கள். அவர்களை நான் தனிப்பட்ட முறையில் குறை சொல்ல முடியாது. ஆனால், அவர்களின் படங்களில் இரண்டு காட்சிகளும் ஒரு பாடல் மட்டுமே இருக்கும். அவர்களது படங்களில் கதாநாயகிகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்காது.

எனக்கு அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை. ஹீரோவால் மட்டுமே ஹீரோயினை வெற்றி பெற செய்ய முடியும் என்பதை நான் விரும்பவில்லை. இந்தப் போக்கை முடிந்த அளவு நான் மாற்ற விரும்புகிறேன். எனக்கு பின்னால் வரும் ஹீரோயின்களுக்கு இந்த விஷயம் முன்மாதிரியாக இருக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours