விஜய் பற்றிய சுசித்ரா விமர்சனத்திற்கு, நடிகை திரிஷா பதிலடி!

Spread the love

பாடகி சுசித்ராவின் சர்ச்சைப் பேச்சுக்கு நடிகை த்ரிஷா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பின்னணி பாடகி சுசித்ராவின் சர்ச்சைப் பேச்சுக்கு நடிகை த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக நடிகை த்ரிஷா விஜயுடன் எடுத்தப் புகைப்படம் ஒன்றைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து சொல்லி இருந்தார். இது சமூகவலைதளங்களில் பல பேச்சுகளுக்கு வழிவகுத்தது.

இதை கவனித்த நடிகர் விஜய் சமூகவலைதளங்களில் வரும் எல்லாவற்றையும் நம்ப வேண்டாம் என சமீபத்தில் நடந்து முடிந்த கல்வி விருது விழாவில் மறைமுகமாக பதிலடி கொடுத்தார். இதோடு, பின்னணிப் பாடகி சுசித்ராவும் விஜய், த்ரிஷாவை விட்டு பிரிய வேண்டும் என்ற ரீதியில் பேசி சர்ச்சையைக் கிளப்பினார்.

இதற்குதான் த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார். ’நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால், உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாதீர்கள்’ என சூசகமாக சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours