பார்சிலோனா கார் ரேஸ் தளத்தில் அஜித்குமார் !

Spread the love

அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வந்தது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் கார் ரேஸ் பயிற்சிக்காக தனது குழுவுடன் ஸ்பெயின் நாட்டுக்கு அவர் செல்வார் என்று கூறப்பட்டது. அதன்படி அவர் இப்போது அங்கு சென்றுள்ளார். அங்குள்ள பார்சிலோனா எஃப் 1 கார் ரேஸ் தளத்தில், தனது பெயர் கொண்ட காருடன் அஜித்குமார் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளன.

அடுத்த ஆண்டு துபாயில் நடக்கும் 24ஹெச் மற்றும் ஐரோப்பிய 24ஹெச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ் போட்டிகளில் அணி தலைவராகவும் ஓட்டுநராகவும் பங்கேற்கிறார், அஜித்குமார். அதற்கான பயிற்சியை இப்போது அவர் மேற்கொண்டுவருகிறார். பல வருடங்களுக்கு பின் டிராக்கில் அஜித் மீண்டும் களமிறங்க இருப்பதால் அவர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours