‘அமரன்’ வசூல் எனக்கு முக்கியம் – சிவகார்த்திகேயன்

Spread the love

‘அமரன்’ வசூல் நிலவரம் தனக்கு முக்கியம் என்பதற்கான காரணத்தை சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் ‘அமரன்’ படத்தின் வசூல் ரூ.200 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நவம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை உலகளாவிய படங்களின் வசூல் பட்டியலில் ‘அமரன்’ படத்தின் வசூல் 7-ம் இடத்தை பிடித்து சாதனை புரிந்தது. அந்த சமயத்தில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய படம் ‘அமரன்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அமரன்’ வெற்றிக் குறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார். கமல்ஹாசன் தயாரித்தது, அப்பாவின் மரணம், சாய் பல்லவியின் நடிப்பு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுப் பேசினார். பின்பு ‘அமரன்’ வசூல் குறித்து சிவகார்த்திகேயன் “ரூ.150 கோடியை தாண்டிவிட்டது என சொல்கிறார்கள். இன்னும் இவ்வளவு வசூல் செய்யும் என்கிறார்கள். தயாரிப்பாளர் நிறைய முதலீடு செய்து படம் எடுக்கிறார்கள். ஆகையால் வசூல் முக்கியம் தான்.

நிறைய வசூல் செய்தால் மட்டுமே, இம்மாதிரியான படங்கள் எடுக்க தயாரிப்பாளருக்கு தோன்றும். அதைத் தாண்டி எனக்கு வசூல் முக்கியம். ஏனென்றால், என்னுடைய படங்களுக்கு பட்ஜெட் கிடைத்தால் மட்டுமே மக்களுக்கு இன்னும் பெரிய படங்களைக் கொடுக்க முடியும். தமிழ் சினிமாவில் இருந்து வெவ்வேறு மாநிலங்களில், நாடுகளில் எவ்வளவு பேரை படம் பார்க்க வைக்க முடியும் என்பது தான். அதற்காக மட்டுமே வசூலைப் பார்க்கிறேன். மற்றப்படி இந்தப் படத்தை தாண்டிவிட்டேன், அந்தப் படத்தை தாண்டிவிட்டேன் என்பதற்காக வசூலை தலையில் ஏற்றிக் கொள்ளமாட்டேன்.

இன்னும் நிறைய பெரிய கதைகள் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். எனது முந்தைய படங்களின் படக்குழு அனைவருக்கும் நன்றி. அவர்களால் மட்டுமே இப்படியான ஒரு ‘அமரன்’ படத்தைக் கொடுக்க முடிந்தது. ’அமரன்’ கமர்ஷியல் வெற்றி மிகவும் முக்கியம். இதே மாதிரியான முயற்சியை நான் செய்து கொண்டே இருப்பேன். இதைவிட இன்னும் பெரிய படமாக கண்டிப்பாக செய்வேன். தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கும் இடத்துக்கு கண்டிப்பாக உண்மையாக இருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours