ஜோதிகாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம்.. சூர்யாவின் ஆசை !

Spread the love

ஜோதிகாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டும் என நடிகர் சூர்யா தனது விருப்பம் தெரிவித்துள்ளார்.

’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘காக்க காக்க’ உள்ளிட்டப் பல படங்களில் சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். பின்பு இந்த ஜோடி திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இவர்களுக்கு தேவ், தியா என இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் படிப்பிற்காக சூர்யா, ஜோதிகா இருவரும் மும்பையில் செட்டில் ஆகியுள்ளனர். சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தியா முழுவதும் நடிகர் சூர்யா தனது ‘கங்குவா’ பட புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய புரோமோஷன் நிகழ்வு ஒன்றில் ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

அந்நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, “ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது கனவாகவே இருக்கிறது. அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன். என்னையும் ஜோதிகாவையும் வைத்து படம் இயக்குங்கள் என எந்த இயக்குநரையும் நான் கேட்கவில்லை. அது தானாக நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அப்படி ஒரு பொருத்தமான கதையை இந்த பிரஞ்சமே நடத்தி வைக்கும்” எனப் பேசியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours