புதுச்சேரி: மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதை புதுச்சேரி அரசு வரும் 13-ம் தேதி வழங்குகிறது. 2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதை இயக்குநர் ஜியோ பேபி பெறுகிறார்.
புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை , நவதர்ஷன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்திய திரைப்படவிழா 2024 வரும் டிச.13-ம் தேதி தொடங்குகிறது. அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் மாலை நடக்கும் விழாவில் 2023-ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை மலையாளத் திரைப்படம் ‘காதல் தி கோர்’ பெறுகிறது. இதன் இயக்குநர் ஜியோ பேபிக்கு விருதை முதல்வர் ரங்கசாமி வழங்குகிறார்.
இத்திரைப்படத்தில் மம்மூட்டி, ஜோதிகா ஆகியோர் நடித்துள்ளனர். நிகழ்வு தொடக்கத்துக்கு பிறகு இத்திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம். அதைத்தொடர்ந்து வரும் 14-ம் தேதி ‘ரபின்ந்ர சுப்யா ரகஷ்யா’ (வங்கம்), 15-ம் தேதி ‘காதல் என்பது பொதுவுடைமை’ (தமிழ்), 16-ம் தேதி சினிமா ‘பந்தி’ (தெலுங்கு), 17-ம் தேதி ‘வேக்சின் வார்’ (ஹிந்தி) ஆகிய படங்களை தினமும் மாலை 6 மணிக்கு இலவசமாகப் பார்க்கலாம்.
+ There are no comments
Add yours