‘கஜினி’ படத்தில் நடித்தது மோசமான முடிவு.. நயன்தாரா வருத்தம் !

Spread the love

” ‘கஜினி’ படத்தில் நான் நடித்தது என் வாழ்வில் எடுத்த மோசமான முடிவு” என நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘கஜினி’. பின்னர், இந்தப் படம் பாலிவுட்டிலும் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது. தற்போதிருக்கும் ரீ-ரிலீஸ் டிரெண்டிற்கேற்ப சமீபத்தில் இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தான் ‘கஜினி’ படம் பற்றி நடிகை நயன்தாரா முன்பு பேட்டியில் பேசியிருந்த விஷயம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், “’கஜினி’ படத்தில் நான் நடித்தது என் வாழ்க்கையின் மிக மோசமான முடிவு என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கதை சொல்லும் போது, என்னுடைய கதாபாத்திரம் எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் படத்தில் அமையவில்லை. சில இடங்களில் நான் மோசமாக சித்தரிக்கப்பட்டேன். ஆனால், இது பற்றி நான் பெரிதாக புகார் செய்ய விரும்பவில்லை. ஏனெனில், இந்த அனுபவமும் என் வாழ்வில் ஒரு கற்றல் அனுபவமாக நான் கருதுகிறேன்” என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

நயன்தாராவின் இந்த அதிருப்தி குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அப்போதே பதிலளித்துள்ளார். “எனக்கு ஒரு கதாபாத்திரம் அல்லது நபரை பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதற்காக, என்னால் படத்தில் ஒரு பாத்திரத்தை குறைக்கவோ அல்லது விரிவாக்கவோ முடியாது.

சில சமயங்களில் நமக்குப் பிடிக்காத நடிகர்களுக்கு நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்திருப்போம். பிடித்தவர்களுக்கு சிறிய கதாபாத்திரம் கிடைத்திருக்கலாம். அது நம் கையில் இல்லை” என்று பதில் கூறியிருக்கிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours