சென்னை: நடிகர் விஜய்சேதுபதி மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழின் எட்டாவது சீசனை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதில் சமீபத்திய எபிசோடில் ஆத்தங்குடி டைல்ஸ் விளம்பரம் கொடுத்திருந்தார்கள். இதுகுறித்து, உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு போட்டிகளும் கொடுக்கப்படும். இதில் இந்த டைல்ஸ் குறித்து போட்டியாளரான தீபக் தவறாக கூறியதாகப் புகார் எழுந்துள்ளது.
தீபக்கின் கருத்தை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பியதால் விஜய் தொலைக்காட்சி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய்சேதுபதி மீது காரைக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் புகார் கொடுத்திருக்கின்றனர்.
+ There are no comments
Add yours