ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் உத்தரவு

Spread the love

சென்னை : நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பும் இன்றே பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “எனது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். 2009-ம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவித்து அந்த பதிவை ரத்து செய்ய வேண்டும்,” எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஜெயம் ரவி நேரில் ஆஜரானார். ஆர்த்தி காணொலி வழியே ஆஜரானார்.

விவாகரத்து வழக்கு மீதான விசாரணையின் போது நீதிபதி தேன்மொழி,இருவருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பாக குடும்ப நல சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பும் இன்றே பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளார். அங்கு எடுக்கப்பட உள்ள முடிவு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours