நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் !

Spread the love

பிரபல குணசித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாயகன் கமல்ஹாசனின் “நாயகன்” படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் சரண்யா பொன்வண்ணன்.

அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அதில் எல்லாம் அவருக்கு கிடைக்காத பெயரும், புகழும்.. அம்மா வேடங்களில் அவர் நடித்த படங்களில் கிடைத்தது.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித் தொடங்கி பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் சரண்யா பொன்வண்ணன்.

இந்நிலையில், சரண்யா பொன்வண்ணனுக்கும் அவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஸ்ரீதேவி என்ற பெண்ணுக்கும் கார் நிறுத்துவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவ்வப்போது வாய்ச்சண்டைகளும் நடந்ததாக கூறப்படுகிறது.

சரண்யாவின் வீடு சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் அமைந்துள்ளது. இந்த சூழலில் நேற்று சரண்யாவின் கார் பக்கத்து வீட்டு சுவரில் லேசாக உரசியதால் பக்கத்து வீட்டு பெண் சரண்யாவுடன் சண்டை போட்டுள்ளார்.

பின்னர், ஸ்ரீதேவி 20 அடி நீளம் கொண்ட தனது வீட்டு கேட்டை திறந்த போது, சரண்யாவின் வாசலில் நின்ற காரை அந்த இரும்பு கேட் உரசுவது போல் வேகமாக சென்றதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சரண்யாவின் குடும்பத்தினர் ஸ்ரீதேவி வீடுபுகுந்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால், சரண்யா குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அத்துடன் சரண்யா குடும்பத்தினர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து ஆபாசமாக திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி அது சம்மந்தமான சிசிடிவி காட்சிகளையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் ஸ்ரீதேவி.

இது குறித்து விருகம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சரண்யா பொன்வண்ணன் தரப்பிலும் ஸ்ரீதேவி மீது புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே நடிகை சரண்யா மீது கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours