நடிகர் தனுஷ் குரலில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.
’பா.பாண்டி’, ‘ராயன்’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க 2கே கிட்ஸூக்கான காதல் கதையாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் முதல் பாடளை தனுஷ் பாடியுள்ளதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் முதல் பாடலாக தனுஷ் பாடியிருக்கும் இந்த பாடலை வெளியிடுவோம் எனச் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ‘ராயன்’ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், உற்சாகமடைந்த தனுஷ் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாது, தனுஷ் நடிப்பில் ‘குபேரா’ திரைப்படமும் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.
+ There are no comments
Add yours