லியோ திரைப்படத்துக்கு வெளிநாடுகளில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

Spread the love

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான “லியோ” திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.130 கோடிக்கு வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. விஜய் திரை வாழ்க்கையில் முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் மற்றும் தமிழ் சினிமாவில் 3-வது படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையையும் படைத்ததுள்ளது. அந்த வகையில், கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் ரூ.12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடு வசூல்

உள்நாட்டில் கிடைத்த வசூலை போல், வெளிநாட்டு சந்தையில் இருந்தும் பெரிய தொகை கிடைத்திருக்கிறது. அதன்படி, லியோ அமெரிக்காவில் ரூ.18 கோடி ($2.2 மில்லியன்) வசூலித்துள்ளது. மேலும், படம் பிரீமியரில் இருந்தே ரூ.16.5 கோடி ($2 மில்லியன்) வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெளியான முதல் நாளில் படத்தின் மொத்த வெளிநாட்டு வசூல் சுமார் ரூ.60 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது போக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

தொடக்க நாளில் இருந்து பாசிடிவ் விமர்சனங்களை பெற்று, லியோ படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக, கண்டிப்பாக வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே படம் வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்து எந்தெந்த படங்களின் வசூல் சாதனையை முறியடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய்யை தவிர, நடிகை த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், அர்ஜுன், சாண்டி, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours