லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் பாசிடிவ் விமர்சனங்களை வழங்கி வருகிறார்கள். பெரிய எதிர்பார்ப்புக்கு வெளியாகியுள்ள இப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ
தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
படத்தின் ஒன்லைன் கதை
மனைவி, மகளுடன் மகிழ்ச்சியாக வாழும் விஜய் சீண்டினால் (பார்த்திபன்) என்ன நடக்கும் என்பது தான் ஒன் லைன். முதல் பாதி, விறுவிறுப்பாகவும், 2ம் பாதி பொறுமையை சோதிக்கும் வகையில் இருக்கிறது. படம் முழுக்க விஜய் ஆக்ஷனில் தெறிக்க விட்டாலும், செண்டிமெண்ட் காட்சிகள் ஒர்க் ஆகவில்லை.
முழு விமர்சனம்
கணவன் மனைவியான பார்த்திபன் (விஜய்) மற்றும் சத்யா (திரிஷா) இருவரும் மகிழ்ச்சியாக அமைதியாகவும் காஃபி கடை ஒன்றை நடத்திக்கொண்டு, அதில் வரும் வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். திடீரென சாண்டி மாஸ்டர் மற்றும் அவரது குழுவுடன் சண்டை ஏற்பட, அவர்கள் பழி தீர்க்கிறார் பார்த்திபன்.
லியோ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டிய முக்கிய காரணங்கள்!
பின்னர், இந்த சம்பவம் சகோதரர்களான ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்), ஹரால்டு தாஸ் (அர்ஜுன்) ஆகியோர் கண்ணுக்கு செல்ல, இது லியோ தாஸ் (விஜய்) தான அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். தாஸ் பிரதர்ஸின் போதை பொருட்களை ஓர் இடத்தில இருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு சென்று பிசினஸை பார்த்து கொணட லியோ தாஸ், ஒரு சம்பவத்தின்போது இறந்துவிடுகிறார்.
இந்த நிலையில், 20 வருடங்கள் கழித்து மீண்டும் லியோ தாஸ் (விஜய்) பார்த்திபனை ஏன் தாஸ் பிரதர்ஸ்கள் தேடி வருகிறார்கள்? அப்போது, அந்த எதிரிகளிடம் இருந்து பார்த்திபன் தப்பிக்கிறாரா? அந்த பார்த்திபன் தான் லியோ தாஸா என்பது குறித்து படம் பார்த்தால் மட்டுமே புரியும்.
இப்படி படம் தொடக்கத்தின் லோகேஷ் சொன்னபடி, 10 நிமிடம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சஸ்பன்ஸ் உடன் காட்சிகள் அமைந்திருக்கும். மேலும், குடும்ப செண்டிமெண்ட் கொண்ட படமாக எடுக்க நினைத்த லோகேஷ் சற்று செண்டிமெண்டில் கோட்ட விட்டதால், சொன்னபடி ஆக்சனில் மிரட்டி இருக்கிறார். படம் முழுக்க சண்டை சண்டை என்று வருவதால், செண்டிமெண்ட் காட்சிகள் கொஞ்சம் மோசம் என்றே சொல்ல வேண்டும்.
த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பு சூப்பர், ஒரு முன்னணி நடிகரின் கேமியோ ரோல் மிகப் பெரிய ட்விஸ்ட். விஜய் சும்மா ஆக்ஷனில் தெறிக்க விட்டு இருக்கிறார். இப்படத்தில் ஹைலைட்டாக பார்க்கப்படுவது ஆக்சன் காட்சிகள் மற்றும் ஹயானா (கழுதை புலி) சண்டை காட்சி. அந்த ஆக்சன் காட்சி வழக்கம் போல அன்பறிவு மாஸ்டர்கள் மிரட்டியுள்ளனர்.
படம் LCUவில் இருக்குமா.? இருக்காதா என என்ற கேள்விக்கான விடை தெரிந்துவிட்டது. ஆம், படம் LCU வில் வருகிறது, ஆனால் படம் பார்த்தால் மட்டுமே உங்களுக்கு புரிய வரும். லியோவில் ராக்ஸ்டார் எந்த குறையும் வைக்கவில்லை. பாடல்களை போல பின்னணி இசையிலும் சும்மா தெறிக்கவிட்டு இருக்கிறார்.
முதல் பாதி வேகமாக ஓடினாலும், இரண்டாம் பாதி சற்று தொய்வு உடன் செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் வரும் விஜய்யின் என்ட்ரி பாடலானநான் ரெடி பாடல் விஜய் ரசிகர்களை கொண்டாட்டமாக மாற்றிருக்கிறது.
லியோவில் பல நடிகர்கள் நடித்திருந்தாலும், படம் முழுக்க தனியாக தெரியும் விஜய் இதுவரை இல்லாமல் நடித்திருக்கிறார். குறிப்பாக, தனது வயதான மற்றும் இளமை கதாபாத்திரங்களில் கொஞ்சம் கூட சலிப்பை ஏற்படுத்தமால் மிரட்டியுள்ளார். லியோ ஒரு குடும்ப செண்டிமெண்ட் என்று பார்க்காமல் ஆக்சன் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆக இருக்கும்.
+ There are no comments
Add yours