“இங்கே ஃபேவரைட்டிசம் கூட ஒரு தகுதியாக மாறியுள்ளது. இந்தத் தகுதியை வளர்த்துக் கொண்டால் எனக்கான பட வாய்ப்புகள் கிடைக்கும்” என நடிகை பரினீதி சோப்ரா தெரவித்துள்ளார்.
பாலிவுட்டில் தனக்கான பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாதது குறித்து அவர் கூறுகையில், “இங்கே சிலருக்கான முகாம்கள் (Camps) உள்ளன. ஃபேவரைட்டிசம் உண்டு. சில வரையறைகளும் உண்டு. ஒரு மாதிரியான திறமையுள்ள இரண்டு பேர் இருந்தால், அதில் சம்பந்தப்பட்ட நபருக்கு, பிடித்தமானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவருக்கு வாய்ப்பு கிடைக்காது. அதனால்தான் இங்கே ஃபேவரைட்டிசம் என்பது கூட ஒரு தகுதியாக மாறியுள்ளது என்கிறேன்.
இந்தத் தகுதியை நான் வளர்த்துக்கொண்டால் எனக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், நான் யாருடைய ஃபேவரைட்டிசத்திலோ, ரிலேஷன்ஷிப்பிலோ, அவர்களின் முகாம்களிலோ இல்லை. இன்று ‘அமர் சிங் சம்கிளா’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பும், ரசிகர்களின் பாராட்டும், நல்ல விமர்சனங்களும், ‘பரினீதி சோப்ரா இஸ் பேக்’ என்ற வார்த்தைகள் இன்னும் சத்தமாக ஒலிக்கின்றன. ஆம், நான் திரும்ப வந்துவிட்டேன்” என்றார்.
அமர்சிங் சம்கிளா : இம்தியாஸ் அலி இயக்கத்தில் உருவான இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது. இதில் தில்ஜித் தோசஜ் மற்றும் பரினீதி சோப்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
+ There are no comments
Add yours