லியோ படத்தின் FDFS காட்சி டிக்கெட் போல, அச்சு அசலாக போலியாக தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்த நிலையில், மதுரை கோபுரம் திரையரங்கு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் தின் இசையில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் உலகளவில் ரிலீசாக காத்திருக்கிறது. இந்நிலையில், மதுரையில் லியோ படத்திற்கான சிறப்பு காட்சி எனக்கூறி போலி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது திரையரங்கதிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலி டிக்கெட் வாங்கி ஏமாந்த ரசிகர் அளித்த தகவலின் அடிப்படையில், கோபுரம் திரையரங்கம் புகார் அளித்துள்ளது. தற்போது, கோபுரம் சினிமாஸ் காவல்துறையிடம் புகார் அளித்த கடிதத்தில், மதுரை உள்ள எங்களது கோபுரம் சினிமாஸ் திரையங்கு கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நல்ல முறையில் நடத்தி வருகிறோம்.
தற்போது நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 19ம் தேதி அன்று எங்களது திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையினை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். ஆனால், இத்திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விற்பனை தற்போது வரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் விஷ்வா என்பவர் 19ம் தேதி அன்று 9 மணி காட்சிக்கான இணையதள டிக்கெட்களை ரெங்கநாதன் என்பவரிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கியதாகவும், அந்த டிக்கெட்டின உண்மைத்தன்மையை அறிய திரையரங்க நிர்வாகத்திடம் நேரில் வந்து விசாரித்துள்ளார்.
இதனையடுத்து, அவரிடம் இருந்து அந்த டிக்கெட்களை வாங்கி ஆய்வு செய்து பார்த்தபொழுது, அவை போலியான டிக்கெட் என தெரியவந்தது. இதன்மூலம், ரெங்கநாதன் இணையதள டிக்கெட் போன்றே போலியான டிக்கெட்களை தயார் செய்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours