ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

Spread the love

மலையாள சினிமாவில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஆவணப்படுத்த 2017 நடிகை தாக்கப்பட்ட வழக்குக்கு பதிலளிக்கும் வகையில் விமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) மனுவைத் தொடர்ந்து கேரள அரசால் நீதிபதி ஹேமா குழு அமைக்கப்பட்டது . ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கே. ஹேமா தலைமையில் , மூத்த நடிகை சாரதா மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கேபி வல்சலா குமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து, மலையாளத் திரையுலகில் உள்ள பல நடிகைகள் மற்றும் இதர பெண் தொழிலாளர்கள் பல்வேறு துறை பிரமுகர்களுடன் தங்கள் வேதனையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முன் வந்தனர்: இதனால் கேரளா திரையுலகமே ஆடிப்போனது.

இந்த நிலையில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீலிடப்பட்ட உறையில் முழு அறிக்கையை இன்று கேரள உயர்நீதிமனறத்தில் ஹேமா கமிட்டி தாக்கல் செய்தது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours