சிவாஜியால் பிரிந்தனரா ஜெமினி கணேசன் – சாவித்ரி!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் நடிகையர் திகலம் என அழைக்கப்பட்டவர் தான் நடிகை சாவித்ரி. நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்டு நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் ஒரு படத்தின் மூலம் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்துவிட்டனர்.

தென்னிந்திய திரையுலகில் நடிகையர் திலகம் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகை சாவித்ரி, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த சாவித்ரி, தெலுங்கு கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். அந்த வகையில், கடந்த 1964-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவுடன் சாவித்ரி இணைந்து நடித்த படம் தான் மோக மனசுலு.

அதுர்த்தி சபாராவ் இயக்கிய இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன்’ இசையமைத்திருந்தார். தெலுங்கில் இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பியுள்ளார் சாவித்ரி. இதற்காக தனது கணவர் ஜெமினி கணேசனிடம் கால்ஷீட் கேட்க, அவரோ இந்த படத்தில் கணவனை வாடா போடா என்று சொல்லும் காட்சிகள் அதிகமாக உள்ளது. அதனால் இந்த படத்தின் நான் நடித்தால் நன்றாக இருக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தை நீ தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் கணவரின் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்காத சாவித்ரி, படத்தில் சிவாஜியை நாயகனாக வைத்து ப்ராப்தம் என்ற பெயரில் ரீமேக் செய்து தானே தயாரித்து இயக்கினார். இந்த படம் தாயரிப்பில் இருக்கும்போது பல தடைகளை சந்தித்தார் சாவித்ரி. படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, ஜெமினி கணேசன் – சாவித்ரி இடையே ஒருநாள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் சாவித்ரி, ஜெமினி கணேசனை வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்ல, அவரும் வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். அதன்பிறகு ப்ராப்தம் படத்தை முடித்த சாவித்ரி படத்தை வெளியிட்டபோது, படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் கடுமையாக பொருளாதார நெருக்கடியை சந்தித்த சாவித்ரி, அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தவித்தார். ப்ராப்தம் படம் தான் சாவித்ரி நாயகியாக நடித்த கடைசி படமாகும்.

இந்த படம் தோல்வியில் முடிந்தாலும், சிறந்த இசையமைப்பாளராக எம்.எஸ்.வி பாராட்டுக்களை பெற்றிருந்தார். இந்த படத்திற்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். 1971-ம் ஆண்டு ப்ராப்தம் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours