‘அமரன்’ திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Spread the love

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிராக சில தரப்பின் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதன் எதிரொலியாக, அந்தப் படம் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேஜர் முகுந்த் வரதராஜனின் ’அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியானது. இதில் முகுந்த் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பதை வெளிப்படையாக காட்டவில்லை என்பது குறித்து பிரச்சினை எழுந்தது. இப்போது படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பு பரப்புவதாக இஸ்லாமிய அமைப்புகளும், எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தபடும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தது. இதனால், தமிழகத்தில் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பவ்லேறு சோதனைகளுக்குப் பிறகே ரசிகர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். தியேட்டர் நுழைவாயில் மற்றும் பிற இடங்களில் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடவும் முற்றுகை போராட்டம் செய்பவர்களை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours