எப்படி இருக்கு கங்குவா டீசர் !

Spread the love

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் மற்றொரு பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். உலகம் முழுவதும் இந்த படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே இது இந்திய சினிமாவில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் கூறி வருகிறார். படத்தின் பல காட்சிகள் பிரமாண்டமாகவும் தனித்துவமாகவும் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும், சூர்யா மற்றும் பாபி தியோல் இருவரும் இரண்டு பழங்குடியின மக்களின் தலைவர்களாக நடித்துள்ளனர்.

டீசரில் இரண்டு நடிகர்களுமே மிரட்டலாகத் தெரிகிறார்கள். அதேபோல் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு ரத்தம் சிந்துவதும், மரணம் உள்ளிட்ட காட்சிகளும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவாவின் கெரியரில் கங்குவா ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சூர்யாவின் வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக இருக்கும்.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். 2022-ல் இந்த படம் வெளியான நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் எந்த படமும் வெளியாத நிலையில், அடுத்ததாக சுதா கொங்கராவுடன் நடிக்கவிருக்கும் புறநானூறு திரைப்படத்தை அறிவித்தார். இதனிடையே தற்போது இந்த படம் தொடங்க தாமதமாகும் என்று அறிவிப்பு வெளியகியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours