எனக்கு தாயாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது- சமந்தா ஓபன் டாக்

Spread the love

தாயாக வேண்டும் என்ற கனவு தனக்கிருப்பதாக நடிகை சமந்தா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

‘தி ஃபேமிலிமேன்’ வெப்சீரிஸ் புகழ் ராஜ் & டிகே இயக்கத்தில் வருண் தவான், சமந்தா நடிப்பில் ‘சிட்டாடல்: ஹனி பனி’ வெப் தொடர் கடந்த வாரம் வெளியானது. இதன் மூலம் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை சமந்தா தொடங்கி இருக்கிறார்.

இந்த தொடர் பற்றிய சமீபத்திய பேட்டி ஒன்றில் தாயாக வேண்டும் என்று தனது கனவு பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் நடிகை சமந்தா.

”எனக்கு தாயாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அது அற்புதமான உணர்வு. எனக்கு வயதாகி விட்டது, தாமதமாகிவிட்டது என்று பலரும் கவலைப்படுகிறார்கள். தாய்மை அடைவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதுதான் என் கருத்து. அதை நான் எதிர்பார்த்திருக்கிறேன்” என்று அந்தப் பேட்டியில் பேசியிருக்கிறார்.

முன்னதாக நடிகர் நாகசைதன்யாவுடனான விவாகரத்தின் போது சமந்தா குழந்தைப் பெற்றுக் கொள்ள மறுத்ததாகவும் அதனால் தான் அவர்களுக்கிடையில் விவாகரத்து ஏற்பட்டது எனவும் செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours