சென்னை: நடிகர் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் கதைத்திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநராகப் போராடிக் கொண்டிருக்கும் கிரிஷ் என்பவர் எழுதிய ‘கிளை சிறை’ என்ற கதையின் கருதான் ‘சொர்க்கவாசல்’ என்றும், அந்த இயக்குநர் புலம்பி வெளியிட்டிருக்கும் வீடியோவையும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
சினிமா விமர்சனங்களுக்குத் தடை போட நினைப்பவர்கள், இதுபோன்று கதைத்திருட்டு சர்ச்சைகளுக்கு மிகத்தாமதமாக நடவடிக்கை எடுப்பது ஏன் என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவையும், ஆர்.ஜே. பாலாஜியையும் டேக் செய்து கேள்வி எழுப்பியிருக்கிறார். ”’நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்குப் பின் பல வருடங்கள் படம் எடுக்க முடியாமல் தவித்து வந்தேன். அந்த சமயத்தில் நான் எழுதிய கதை தான் இது. அறிவுத்திருட்டு அநியாயம்” என கூறியிருக்கிறார். ஆனால், இதுபற்றி ஆர்.ஜே. பாலாஜி தரப்பு விளக்கம் இதுவரை எதுவும் கொடுக்கவில்லை.
+ There are no comments
Add yours