கடைசி 2 நாட்களில் நான் செய்த எடிட்டிங் சொதப்பலே லால் சலாம் தோல்விக்கு முக்கிய காரணம் என்று இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
2012-ம் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 9 ஆண்டுகள் இடைவேளிக்கு பிறகு தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு முழுநீள கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். நிரோஷா, ஜீவிதா, செந்தில் தம்பி ராமையா, கே.எஸ்.ரவிக்குமார், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை லைகா நிறுவனம தயாரித்திருந்த்து.
ரஜினிகாந்த் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், இது ரஜினிகாந்த படம் தான் என்று விளம்பரங்கள் வந்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி வெளியான லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்து. 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குனராக வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெரிய வெற்றிப்படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனிடையே படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ள ஐஸ்வர்ய ரஜினிகாந்த், எனது கதையில் மொய்தீன்பாய் கேரக்டர் படத்தில் இடைவேளையில் வருவது போலத்தான் இருந்தது. ஆனால் படத்தின் கமர்ஷியல் காட்சிக்காக ரஜனிகாந்த் கேரக்டரை முன்னாடியே கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல், கடைசி 2 நாளில் மொய்தீன் பாய் கேரக்டரை முன்னாடி கொண்டுவருவது குறித்து எடிட்டிங் டேபிளில் வைத்து செய்தோம்.
இதுதான் இந்த படத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அதேபோல் இந்த படத்தில் செந்தில் கேரக்டர் தான் படத்தின் நாயகனாக இருந்தது. ஆனால் எப்போது ரஜினிகாந்த் படத்தின் உள்ளே வந்தாரோ, அதன்பிறகு ரசிகர்கள் கதையை விட்டு விட்டு மொய்தீன்பாய் கேரக்டரை ரசிக்க தொடங்கிவிட்டனர். இது தான் இந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடைசிவரை தனக்கு படம் இயக்க தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாரே என்று கூறி வருகின்றனர்.
+ There are no comments
Add yours