திரையரங்குகளில் வெளியான போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இணையத்தில் வெளியாகி மீண்டும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது ‘கங்குவா’ திரைப்படம்.
நவம்பர் 14-ம் தேதி வெளியான படம் ‘கங்குவா’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி, பெரும் கிண்டலுக்கு ஆளானது. அதன் இசை அளவு, காட்சியமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்து கருத்துகளை பகிர்ந்தார்கள். இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்தது.
தற்போது மீண்டும் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது ‘கங்குவா’ திரைப்படம். இணையத்தில் ஹெடி தரத்தில் ’கங்குவா’ படம் வெளியாகியுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து பார்த்தவர்கள், ‘கங்குவா’ படத்தினை கிண்டல் செய்து வருகிறார்கள். அதன் காட்சியமைப்புகளை வெளியிட்டு, இதெல்லாம் ஒரு காட்சியா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும், நானே தற்கால காட்சிகளை இதைவிட நன்றாக எழுதியிருப்பேன் என்றும் சிலர் பதிவிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக முதலில் ஒலியமைப்பு அதிகப்படியாக இருக்கும் பதிவே வெளியாகி இருக்கிறது. ஒலியமைப்பு சரியில்லாத காட்சிகளை எல்லாம் கோர்த்து, இதை எல்லாம் எப்படி திரையரங்குகளில் பார்த்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்தப் பதிவுகளால் ‘கங்குவா’ ஹேஷ்டேக் இந்தியளவில் மீண்டும் ட்ரெண்ட்டாகி வருகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. டிசம்பர் 12-ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது ‘கங்குவா’. அதில் பார்த்துவிட்டும் இதே போன்று கிண்டல்கள் வருவது உறுதி என்பது இப்போதே தெரிகிறது.
+ There are no comments
Add yours