‘கங்குவா’ படம் குறித்து மதன் கார்க்கி விமர்சனம்

Spread the love

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’படம் எப்படி இருக்கிறது என பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிறுத்த சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியாகிறது. பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கான புரோமோஷன் பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை அவர் மும்பையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து வருகிறார்.

இப்போது ‘கங்குவா’ படம் எப்படி இருக்கிறது என்பதை படத்தில் திரைக்கதையாசிர்களில் ஒருவராகப் பணிபுரிந்திருக்கும் பாடலாசிரியர் மதன் கார்க்கி சொல்லியிருக்கிறார். ‘’கங்குவா’ படத்தை முழுவதும் பார்த்தேன். டப்பிங்கின் போது ஒவ்வொரு காட்சியையும் நூறு முறைக்கு மேல் பார்த்திருப்பேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அதன் தாக்கம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

காட்சிகளின் பிரம்மாண்டம், கலை, கதையின் ஆழம், இசையின் தாக்கம், சூர்யாவின் நடிப்பு என அத்தனையும் சேர்த்து படத்தை சிறந்த கலைப்படைப்பாக மாற்றியிருக்கிறது. இயக்குநர் சிவாவுக்கு நன்றி’ எனக் கூறியிருக்கிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours