மம்மூட்டியின் தவறவிடக்கூடாத 10 மலையாள திரைப்படங்கள்

Spread the love

திருவனந்தபுரம்: நடிகர் மம்மூட்டி இன்று (செப்.7) தனது 73ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற தவறவிடக்கூடாத 10 மலையாள படங்கள் குறித்தும் அவை இடம்பெற்றுள்ள ஓடிடி தளங்கள் குறித்தும் பார்ப்போம்.

பத்தேமாரி (2015) – கேரளாவில் இருந்து துபாய்க்கு பிழைப்பைத் தேடிச் செல்லும் ஒருவரின் கதை. சலீம் அகமது இயக்கத்தில் வெளியான இப்படம் புலம்பெயர் தொழிலாளின் வலியை அழுத்தமாக பேசியது. இந்தப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் காணக்கிடைக்கிறது.

ஒன் (2021) – ஊழலுக்கு எதிராக முதல்வராக இருக்கும் மம்மூட்டி எடுக்கும் நடவடிக்கைகளும், அதையொட்டிய நிகழ்வுகளும் படத்தின் ஒன்லைன். சுவாரஸ்யம் குறையாமல் நகரும் இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.

பீஷ்ம பர்வம் (2022) – கேரளாவிலிருந்து ஒரு மாஸ் திரைப்படம். அட்டகாசமான மல்டி ஸ்டார் காம்போவில் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.

புழு (2022) – ஆணவ கொலையை பற்றி பேசும் இப்படம் மிக பொறுமையாக அதே சமயம் அழுத்தமான காட்சிகளுடன் ஈர்க்கும். இப்படம் சோனி லிவ் ஓடிடியில் உள்ளது.

ரோசார்ச் (2022) – மர்மங்கள் உள்ளடங்கிய வீடு, அதையொட்டிய நிகழ்வுகள் தான் படத்தின் ஒன்லைன். வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.

நண்பகல் நேரத்து மயக்கம் (2022) – மம்மூட்டிக்கு ஏற்படும் மன நிலை மாற்றத்தால் ஏற்படும் சம்பவங்களும் அதையொட்டி நிகழ்வுகளையும் சுவாரஸ்யமாக விவரிக்கும் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காண கிடைக்கிறது.

கண்ணூர் ஸ்குவாட் (2023) – காவல்துறை அதிகாரியான மம்மூட்டி மற்றும் குழுவினர் குற்றவாளிகளை தேடிப்பிடிக்க வடமாநிலம் செல்கின்றனர். அங்கு என்ன நடந்து என்பது கதை. அயற்சியில்லாமல் நகரும் இப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.

காதல் தி கோர் (2023) – தன்பாலின ஈர்ப்பாளர்களின் வலியையும், மனநிலையையும் அழுத்தமாக பேசிய இந்தப் படம் மலையாள திரையுலகின் மைல்கல். அமேசான் ப்ரைமில் உள்ளது.

பிரம்மயுகம் (2024) – அமானுஷ்ய சம்பவங்களை மிக நேர்த்தியாக கருப்பு வெள்ளை காட்சிகளில் காட்சிப்படுத்தி, புது திரை அனுபவத்தை கொடுக்கும் இப்படம் சோனி லிவ் ஓடிடியில் உள்ளது.

டர்போ (2024) – நண்பனைக் கொன்றவர்களை பழிவாங்கும் கதை தான் என்றாலும் ஆக்ஷன் ரசிகர்களுக்கான விருந்து. சோனி லிவ் ஓடிடியில் படத்தை பார்க்கலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours