இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள்

Spread the love

ஒவ்வொரு வருட இறுதியிலும் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பற்றிய விவரங்களை, தேடுதளமான கூகுள் வெளியிடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் முதல் இடத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்த ‘ஸ்த்ரீ 2’ என்ற இந்திப் படம் உள்ளது. 2-வது இடத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல் நடித்த, ‘கல்கி 2898 ஏடி’, 3-வது இடத்தில் இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘12-த் பெயில்’ (இது கடந்த ஆண்டு வெளியான படம்), 4-வது இடத்தில், இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ள ‘லாபதா லேடீஸ்’ ஆகிய படங்கள் உள்ளன.

அடுத்தடுத்த இடங்களில், தெலுங்கில் வெளியான ‘ஹனுமான்’, விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’, மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கிலும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மள் பாய்ஸ்’, விஜய் நடித்த ‘கோட்’, பிரபாஸ் நடித்த ‘சலார்’, ஃபஹத் ஃபாசில் நடித்த ‘ஆவேஷம்’ ஆகிய திரைப்படங்கள் உள்ளன.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய வெப் தொடர்களில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், சோனாக்‌ஷி சின்ஹா, மனீஷா கொய்ராலா, அதிதி ராவ் உட்பட பலர் நடித்த ‘ஹீராமண்டி: தி டைமண்ட் பஜார்’ முதலிடத்தில் உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours