கேப்டன் நினைவிடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் !

Spread the love

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களின் புதிய படத்தின் பெயர் வெளியிடபட்டுள்ளது.

வந்தாரை வாழவைக்கும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் நினைவாக

தயாரிப்பாளர் குணாஜீ இயக்கிய ‘காணாம தேடுகிறோம்’ என்ற நினைவு பாடல் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் புதிய படத்தின் பெயரை, விஜயகாந்த்தின் நினைவிடத்தில் வெளியிட்டார்.

கேப்டன் விஜயகாந்த் மறைந்து 1 மாதம் ஆக உள்ள நிலையில் இந்த நிகழ்வில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி, கட்சி நிர்வாகிகள் என ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்தில் அலங்காரம் செய்து ஆரத்தி எடுத்து கேப்டனை வணங்கிய கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:

தலைவர் மறைந்து 48 நாட்கள் கடந்துள்ளது. தினந்தோறும் விஜயகாந்த் நினைவிடத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

48-வது நாள் என்பது ஒரு முக்கியமான நாள். 48 நாட்களை ஒரு மண்டலம் என்று கூறுவார்கள். விண்ணுலகத்தில் இருந்து தலைவர் அனைவரையும் ஆசிர்வாதம் செய்து வருகிறார் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க அடையாள அட்டை வாங்கி கொடுத்தது அண்ணன் விஜயகாந்த் தான். அந்த அடையாள அட்டையை வைத்து தான் நான் இன்னும் நடிப்புத்துறையில் இருந்து வருகிறேன்.

என் படத்தின் பெயரை அவர் நினைவிடத்தில் வெளியிடுவது நன்றி கடன் செலுத்துவது என்று ஒரு சாதாரண வார்த்தையால் மட்டும் சொல்ல முடியாது.

என் இதயத்தை அவருடைய காலில் வைப்பது போல் எனக்கு தோன்றுகிறது.

நான் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் பெயர் மற்றும் வெளியீடு தேதி விஜயகாந்தின் நினைவிடத்தில் வைத்து தான் அறிவிக்க வேண்டும் என தயாரிப்பாளரும் நானும் அசைப்பட்டோம்.

இந்த இடத்தில் விஜயகாந்த் ஒரு இறைவனாக காணப்பட்டு வருகிறார். அவருடைய ஆசிர்வாதத்துடன் நாம் பெரிய பெரிய வெற்றிகளை அடைவோம் என எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து திரைப்படத்தின் பெயரை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார் அப்படத்திற்கு ‘அக்கரன்’ என பெயரிடப்பட்டுள்ளது .

இந்த திரைப்படம் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் விஜயகாந்தின் இதயத்தில் இடம் பிடித்தவர் தான் நடிகர் பாஸ்கரன் எனவும் நாங்கள் இரு குடும்பங்களும் ஒரு நட்போடு பழகி வந்தோம் என்றும் தெரிவித்தார்.

திரையுலகிலும் அரசியல் களத்திலும் எத்தனையோ பேரை வாழ வைத்த கேப்டன் விஜயகாந்த் மறைந்து 48 நாட்கள் ஆன நிலையில் இன்றும் அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours