‘அம்மா’ அமைப்பின் எந்தவொரு பதவியையும் ஏற்கப் போவதில்லை என்று மோகன்லால் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு மலையாள திரையுலக நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்புக்கு தேர்தல் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. பழைய செயற்குழுவே இருக்கட்டும் என்று முன்னாள் துணைத் தலைவர் ஜெயன் சேர்தலா தெரிவித்திருந்தார். அதையே தான் நடிகர் சுரேஷ் கோபியும் கூறினார்.
ஆனால், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலகில் பாலியல் புகார் தொடர்பான சர்ச்சை வெடித்தது. இதனை வைத்து பலரும் ‘அம்மா’ அமைப்பையே குறை கூறினார்கள். இதனால் இந்த அமைப்பின் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் என எந்தவொரு பதவியையும் ஏற்கப் போவதில்லை என மோகன்லால் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்தது தான் அம்மா அமைப்பு. அதில் ஒருவர் மீது புகார் எழுந்தால், அதற்காக ஒட்டுமொத்த அம்மா அமைப்பை குறை கூறுவது ஏற்படையுது அல்ல எனவும் கூறியிருக்கிறார் மோகன்லால். இதனால் அம்மா அமைப்புக்கு புதிதாக ஒருவர் தலைவராக பொறுப்பேற்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
முன்னதாக, மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது வெளியான பின் பல நடிகைகள் பலர் தங்களுக்கு பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக கூறி வந்தது நினைவுக் கூரத்தக்கது.
+ There are no comments
Add yours