சண்முக பாண்டியன் நடிக்கும் படம், ‘படை தலைவன்’. யு.அன்பு இயக்கும் இதில், கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதற்கிடையே, நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவின் போது, படை தலைவன் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயாராக இருப்பதாக ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இதுபற்றி இயக்குநர் அன்பு கூறும்போது, படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது. இதை தயக்கத்துடன் லாரன்ஸிடம் கூறினேன். அவர், ‘எவ்வளவு நிமிடம் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. சம்பளம் வேண்டாம்.
ஏழ்மை நிலையில் இருக்கும் 4 குடும்பங்களுக்கு முடிந்த உதவிகளை செய்தால் போதும்’ என்றார். இது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours