தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றியும் பேச வேண்டும் என நடிகை சமந்தா குரல் எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக பல முன்னணி நடிகர்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
நடிகைகள் பார்வதி, ரேவதி உள்ளிட்ட பலரும் இதற்காக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். ஹேமா கமிட்டி பற்றியும் நடிகைகளின் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து வெளிவருவது பற்றியும் ஆதரவு குரல் எழுப்பி இருக்கும் நடிகை சமந்தா, தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றியும் வெளிப்படையாக பேச வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
தனது சமூகவலைதளப் பக்கத்தில் இது குறித்து பகிர்ந்துள்ள அவர், ‘கேரளாவில் WCC அமைப்பின் அறிக்கையை வரவேற்கிறேன். கடந்த 2019ஆம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் துணை அமைப்பாக ‘தி வாய்ஸ் ஆஃப் உமன்’ உருவாக்கப்பட்டது. தெலுங்கானா அரசும் கேரள அரசு போல பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியிட வேண்டும். அப்படி இருந்தால்தான் தெலுங்கு திரையுலகிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours