படப்பிடிப்பில் விபத்து- பிரபல மலையாள நடிகர் காயம்.

Spread the love

கொச்சி: மலையாள படமான ‘ப்ரோமான்ஸ்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் அர்ஜுன் அசோகன் மற்றும் ‘பிரேமலு’ பட புகழ் சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன் நடிப்பில் உருவாகி வரும் மலையாள படம் ‘ப்ரோமான்ஸ்’ (bromance). இந்தப் படத்தை அர்ஜுன் டி.ஜோஸ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் கொச்சியின் எம்.ஜி.சாலையில் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது உணவு டெலிவரிக்காக சென்றுகொண்டிருந்தவரின் பைக் மீது படக்குழுவினரின் கார் வேகமாக மோதி கவிழ்ந்தது. இதில் உணவு டெலிவரி செய்யும் நபரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே காரில் இருந்த நடிகர்களும், உணவு டெலிவரி நபரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தின்போது காரின் முன்பக்கம் நடிகர் அர்ஜுன் அசோகனும், பின்பக்கம் சங்கீத் பிரதாப்பும் இருந்தனர். இதில் கார் ஓட்டுநர் மற்றும் அர்ஜுன் அசோகனுக்கு சிறிய அளவிலான காயங்களும், சங்கீத் பிரதாப்புக்கு கழுத்தில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு வந்த காவல் துறையினர் நொறுங்கிய கார் உள்ளிட்ட வாகனங்களை அப்புறப்படுத்தினர். மேலும், இந்தச் சம்பவத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வேகமாக கார் ஓட்டியதாக கூறி படக்குழுவைச் சேர்ந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours