இயக்குநர் வெற்றிமாறன் கதையில் நடிகர் சிலம்பரசன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிலம்பரசன் தற்போது ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இவர் இணைந்து நடித்திருக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கடுத்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 90’ஸ் காலக்கட்டத்தில் பார்த்த விண்டேஜ் சிம்புவாக இவர் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியது. இதோடு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட சிம்புவின் 48ஆவது படம் பட்ஜெட் பிரச்சினைகள் காரணமாகத் தொடங்கப்படாமல் உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், வெற்றிமாறன் கதை, வசனத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும் இந்தப் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்குகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது. இதற்கு முன்பு, இவர்கள் தயாரிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்திருந்தார். இதற்கடுத்தும் இதே தயாரிப்பு நிறுவனத்திற்கு இவர் படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் பிரச்சினை ஆனது நினைவிருக்கலாம்.
+ There are no comments
Add yours