பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். ஆஸ்கர் விருது பெற்ற இவர், ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘டெனெட்’, ‘ஓபன்ஹெய்மர்’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தின் சார்பில் வழங்கப்படும் ‘சர்’ பட்டம் கிறிஸ்டோபர் நோலனுக்கும் அவர் மனைவியும் தயாரிப்பாளருமான எம்மா தாமஸுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் இந்தப் பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.
இது தொடர்பாக இங்கிலாந்து அரசக் குடும்ப இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சர் கிறிஸ்டோபர் நோலன், அவரது மனைவி எம்மா தாமஸ் இருவரும், தி டார்க் நைட் டிரையாலஜி, ஓபன்ஹெய்மர் போன்ற பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். திரைப்படத்துறைக்கான இன்றியமையாத பங்களிப்புக்காக அரச குடும்பத்தின் மூலம் அங்கீகரிக்கப் பட்டுள்ளனர்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours