ஒரே பாடலில் பல உணர்வுகள்…கண்ணதாசன் செய்த மேஜிக் !

Spread the love

வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை தனது பாடல் வரிகள் மூலம் சொல்லிக்கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் கவியரசர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த் கமல்ஹாசன் என பலருக்கும் தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளார்.

அதேபோல் தனது பாடல்கள் மட்டுமல்லாமல், மற்ற கவிஞர்களின் பாடல்களையும் ரசிக்கும் மனம் கொண்ட கண்ணதாசன், வாலி எழுதிய ஒரு பாடலை கேட்டுவிட்டு அவரை பாராட்டி, நான் இறந்தால் நீதான் கவி பாட வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி கண்ணதாசன் இறந்த 3-வது நாள் அவருக்கான கவிஞர் வாலி கவிதை பாடியுள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், இளையராஜாவுடன் இணைந்தும் ஹிட் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் சிவாஜி நடிப்பில் வெளியான ரிஷிமூலம் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில், பல உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கண்ணதாசன் எழுத, அதற்கு அற்புதமாக இளையராஜா இசைமைத்திருப்பார். 1980-ம் ஆண்டு வெளியான படம் ரிஷிமூலம். எஸ்.பி முத்துராமன் இயக்கிய இந்த படத்திற்கு இயக்குனர் மகேந்திரன் கதை எழுதியிருந்தார். கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

மனைவியை பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வரும் சிவாஜி, தேயிலை தோட்டத்தில் வேலை செய்கிறார். எதேர்ச்சையாக அவரிடம் வந்து சேரும் ஒரு பெண்ணை தனது மகனை பார்த்துக்கொள்ள சொல்கிறார். அந்த பெண் மகனை பார்த்துக்கொள்வது மட்டுமல்லாமல், சிவாஜியையும் காதலிக்கிறார். அப்போது தனது காதலை வெளிப்படுத்தவும், அந்த மகனின் மேல் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ஒரு பாடல் வரும். இளையராஜா இசையமைத்த இந்த பாடலில் பல உணவுகள் அடங்கியிருக்கும்.

இந்த பாடலின் முதல் இடை இசையில் அந்த பெண்ணின் காதல் உணர்வையும், 2-வது இடை இசையில், பாடல் படமாக்கப்பட்ட மலைபிரதேச பகுதிகளின் உணர்வையும், அதேபோல் பாடலின் மெட்டு முழுவதும் அந்த குழந்தையின் மீதுள்ள பாசம், அதற்கான தாலாட்டு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் கண்ணதாசன் பாடல் வரிகளை அமைத்திருப்பார். இந்த பாடல் தான் வாடா என் கண்ணா என்று தொடங்கும் அந்த பாடல். எஸ்.பி.சைலஜா பாடிய இந்த பாடல் பல உணவுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைத்திருப்பது இதன் சிறப்பம்சம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours