கேரள எம்.எல்.ஏ ரமேஷ் சென்னிதாலா சூர்யாவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார். சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்காக மும்பை மற்றும் டெல்லியில் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் சூர்யா. இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் போது கேரளா எம்.எல்.ஏ ரமேஷ் சென்னிதாலாவை சந்தித்துள்ளார் சூர்யா.
இது தொடர்பாக ரமேஷ் சென்னிதாலா, “தென்னிந்திய சூப்பர் ஸ்டார் சூர்யாவை டெல்லி விமான நிலையத்தில் இன்று சந்திக்கும் வாய்ப்பு! ஒரு நடிகராகவும், சமூகப் பொறுப்புள்ளவராகவும் அவருக்குத் தேவையான ஒரே ஆதாரம் அவரது ‘ஜெய் பீம்’ திரைப்படம்தான்!” என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளா காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக வலம் வருபவர் ரமேஷ் சென்னிதாலா. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் நெருங்கிய நட்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours