‘தலைவெட்டியான் பாளையம்’ வெப் சீரிஸ்- ஒரு பார்வை

Spread the love

இந்தியில் வெளியாகி நாடு முழுவதும் பரவலாக கவனிக்கப்பட்ட தொடர்களில் ஒன்றான ‘பஞ்சாயத்’ தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ‘தலைவெட்டியான் பாளையம்’ என்ற பெயரில் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்த முக்கிய அம்சங்கள் அடங்கிய பார்வை:

ப்ளஸ்…

நகரத்துக்கு இளைஞர் சித்தார்த் (அபிஷேக் குமார்) பஞ்சாயத்து செகரட்டரி வேலைக்காக வேண்டா வெறுப்பாக ஒரு குக்கிராமத்துக்கு வருகிறார். அந்தக் கிராமத்துச் சூழலுக்கு ஏற்ப எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டார் என்பதே இந்த ‘தலைவெட்டியான் பாளையம்’ தொடரின் சுவாரஸ்ய மையக்கரு.

சேத்தன், தேவதர்ஷினி, பால் ராஜ், ஆனந்த்சாமி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை முடிந்தவரை சரியாகச் செய்திருப்பது எங்கேஜிங்காக பார்வையாளர்களை வைக்க உதவுகிறது.

இந்தத் தொடரில் நகைச்சுவையாக வகைப்பட்ட வசனங்கள் சில இடங்களில் கைகொடுக்கச் செய்திருக்கின்றன.

அசல் பார்க்காமல் புதிதாக பார்ப்பவர்களுக்கு வன்முறை, ரத்தம் இல்லாத சிம்பிளான பாதகம் இல்லாத ஒரு வெப் தொடர் பார்த்த அனுபவம் கிட்டலாம் என்பது முக்கிய ப்ளஸ்.

மைனஸ்…

‘பஞ்சாயத்’ வெப் தொடரின் பலமே அதன் நேட்டிவிட்டிதான். ஏறக்குறைய ஒரு வட இந்திய கிராமத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு தொடர் முழுக்க பார்க்கும் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். இந்த இயல்புத்தன்மை ‘தலைவெட்டியான் பாளையத்தில்’ முற்றிலுமாக மிஸ்ஸிங். கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகள் என அனைத்திலும் ஒருவித செயற்கைத்தனம் தொற்றிக் கொள்கிறது.

ஹீரோவாக வரும் அபிஷேக் குமார் சற்றும் அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒட்டாதது போல தோன்றுகிறார். ஆரம்பத்தில் கிராமத்து மனிதர்களிடம் அவர் காட்டும் எரிச்சல் ரியாக்‌ஷன்கள் ஓகே. ஆனால், போகப் போக மெல்ல அவர்களுடன் பழகும் காட்சிகளில் கூட எந்த வித்தியாசமும் காட்டியதாக தெரியவில்லை.

தமிழுக்கு ஏற்ப சில காட்சிகளை மாற்றியிருந்தாலும் கரு என்னவோ ஒன்றுதான். ஆனாலும், அசலில் இருந்த அந்த சுவாரஸ்யம் இதில் மிஸ்ஸிங்.

இந்தி ‘பஞ்சாயத்’ தொடரில் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்த அந்த ஒரு மேஜிக், இதில் எந்த இடத்திலும் நிகழவே இல்லை. ஏற்கெனவே ஒரிஜினலை பார்த்தவர்களுக்கு பல இடங்களில் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்தது பெரும் குறை.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours