சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் முதல் சிங்கிளான ‘பையர் சாங்’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல் சிங்கிள் எப்படி? – தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கான வரிகளை விவேகா எழுதியுள்ளார். வி.எம்.மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடலை பாடியுள்ளனர். ‘ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே, மாய நெருப்பே, மலை நெருப்பே’ என தொடங்கும் இப்பாடல் உடுக்கை சத்தத்துடன் உற்சாகம் கூட்டுகிறது. இனக்குழுவின் பெருமையை பேசும் வகையிலான இப்பாடலில் உருமி, பம்பை மற்றும் நாட்டுப்புற தாள வாத்தியங்களின் சத்தம் அதிகம் ஒலிக்கிறது. சில வரிகள் கவனம் பெறுகின்றன. ரசிகர்களிடையே பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
கங்குவா: சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
+ There are no comments
Add yours