சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ரஜினியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் புது அப்டேட்டாக படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினி நடித்துள்ள 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ‘கூலி’ படத்தில் ரஜினியின் தோற்றத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours