எம்.ஜி.ஆரை மறைமுகமாக தாக்கினாரா வைரமுத்து !

Spread the love

எம்.ஜி.ஆரை மறைமுகமாக குறிப்பிடுவது போல் அமைந்த வரிகளை ரஜினிகாந்த் மாற்றச் சொன்னதற்கு, கவிப்பேரரசு வைரமுத்து அருமையான விளக்கம் கொடுத்து, அந்த வரிகளை அப்படியே இடம்பெறச் செய்தார். அது என்ன பாடல், என்ன வரிகள் என்பதை இப்போது பார்ப்போம்.

இதுதொடர்பான தகவல்களை விளரி யூடியூப் சேனலில் ஆலங்குடி வெள்ளைச்சாமி விவரித்து இருக்கிறார். அந்த வீடியோவில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான திரைப்படம் படையப்பா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருப்பார். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் தான் ’ஓஓஓ கிக்கு ஏறுதே’. இந்தப் பாடலை எழுத வைரமுத்துவை அழைத்த ரவிக்குமார், பாடலுக்கான சிச்சுவேஷனை சொல்லவில்லை. ஆனால் வைரமுத்துவே சித்தர் மனநிலையில் இருக்கும் ஒருவர் பாடும் வகையில் பாடலை அமைத்தார்.

இந்தப் பாடலில் இரண்டு சர்ச்சை வரிகள் இருந்தன. முதலில் ‘ஜீவன் இருக்கும் மட்டும், வாழ்க்கை நமக்கு மட்டும்.. இதுதான் ஞானச் சித்தர் பாட்டு’. இந்த வரிகளில் முதலில் ரஜினி சித்தர் என்று வைரமுத்து எழுதியிருப்பார். ரஜினி அப்போது அடிக்கடி இமயமலை சென்று ஞானிகளை சந்தித்து வந்ததாலும், மேலும் ரஜினி பெயர் இருந்தால் ரசிகர்கள் நல்ல விதமாக இருப்பார்கள் என்ற நோக்கத்திலும் ரஜினி சித்தர் என்று எழுதப்பட்டது. ஆனால் ரஜினி மறுத்து, சித்தர் அளவுக்கு என்னை கொண்டு போக வேண்டும் எனக் கூறி கடுமையாக மறுத்துவிட்டார். இதனையடுத்து மாற்றப்பட்ட வரி தான் ஞானசித்தர்.

அடுத்த சர்ச்சை வரிகள் ‘கம்பங்கழி தின்னவனும் மண்ணுக்குள்ள… தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள’. இந்த வரிகளை மாற்றச் சொன்னப்போது, வைரமுத்து ஏன் எனக் கேட்கிறார். எம்.ஜி.ஆர் தங்கபஸ்பம் சாப்பிட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இப்படி வரிகளை வைத்தால் பிரச்சனையாகும் என்று ரவிக்குமார் கூறியிருக்கிறார். அதற்கு வைரமுத்து, எம்.ஜி.ஆர் எங்கேயும் நான் தங்கபஸ்பம் சாப்பிட்டேன் என்று கூறியதில்லை. எந்த மனிதரும் தங்கபஸ்பம் சாப்பிட்டாரா என்பதும் சந்தேகம் தான். அதனால் பிரச்சனை இல்லை என்று அந்த வரிகளை இடம்பெறச் செய்திருக்கிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours