‘கோட்’ படத்தில் கேப்டன்- விஜயபிரபாகரன் கருத்து

Spread the love

சென்னை: நடிகர் விஜயின் ‘GOAT’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் வரும் காட்சிகளைப் பற்றி மகன் விஜயபிரபாகரன் பேசியிருக்கிறார்.

நடிகர் விஜயின் ‘GOAT’ படத்தின் ஆரம்ப காட்சியிலேயே மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டு வந்திருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு. சில நிமிடங்களே விஜயகாந்த் வந்திருந்தாலும் அவரது காட்சிகள் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் விஜயகாந்தை கொண்டு வருவதற்கு முன்பே அவரது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினரிடம் முறையான அனுமதி வாங்கியே படத்தில் கொண்டு வந்திருப்பதாகவும் வெங்கட்பிரபு தெரிவித்திருந்தார். பட ரிலீஸூக்கு முன்பாகவும் விஜய், வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பிரேமலதாவை நேரில் சந்தித்தனர்.

‘GOAT’ படத்தில் விஜயகாந்தை கொண்டு வந்திருப்பது பற்றிய கேள்விக்கு அவரது மகன் விஜயபிரபாகரன் இன்று மதுரையில் பதில் கொடுத்திருக்கிறார். ”பல்வேறு பணிகள் காரணமாக இன்னும் நான் ‘GOAT’ படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், அந்தப் படத்தில் அப்பா வரும் காட்சிகளைப் பலரும் எனக்கு சமூகவலைதளங்களில் அனுப்பி வைக்கின்றனர். தியேட்டரில் அந்தக் காட்சியை மக்கள் கொண்டாடுவதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது” என நெகிழ்ந்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours