அரசுக்கு எதுக்கு சினிமா ? அவங்க வேலைய பார்த்தா போதும்- நடிகர் விஷால் கடும் தாக்கு.

Spread the love

சென்னை: கடலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஷால் செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த அரசாங்கம் சினிமாவில் தலையிடவில்லை, இப்போதையை அரசின் தலையீடு அதிகமாக உள்ளது, அரசு அவங்க வேலையை பார்த்தாலே போதும், எதுக்கு உங்களுக்கு சினிமா என்று திமுக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

விஷயம்! இரண்டாம் பாகம் தோல்வி அடைவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஷால், பத்து வருஷத்திற்கு முன்னாடி ஓடிடி இல்ல, இப்போது ஓடிடி வந்துவிட்டது, கொரோனா காலத்தில் மக்கள் எல்லாவிதமான மொழி படத்தையும் பார்க்க பழகிவிட்டார்கள். மக்களின் விருப்பமும் இப்போது மாறி உள்ளது. இதனால், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாமும் படத்தை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் 2 ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசும், இந்த அரசும் அப்படிதான் செய்கிறது. சினிமா துறை ரொம்ப கஷ்டப்படுகிறது. சினிமா துறைக்கு இந்த ஆண்டு மிகவும் கடினமான வருடமாக இருக்கிறது. இதற்குகாரணம், சிறிய படத்தை வாங்க யாரும் முன்வருவதில்லை, சின்னப் படங்களுக்கு அதுக்கான இடம் கொடுக்கப்படுவதில்லை, அடுத்து வரும் மாதங்களில் 10 பெரிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அந்த 10 படங்களும் தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ்னு அவங்கங்க ஸ்பாட்டை எடுத்துக்கொண்டார்கள். இதனால் சின்னப்படங்கள் எப்படி ரிலீஸ் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருந்தாலும் நல்ல படங்கள் ரிலீஸ் ஆனால் மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் இந்த வருடம் வியாபார ரீதியாக சினிமா துறைக்கு ஒரு கஷ்டமான ஒரு ஆண்டாகவே இருக்கும்

சினிமாத்துறையில் இருந்து அரசுக்கு ஆதரவாகவும், எதிராக வரும் கேள்வி பதில் அளித்த விஷால், அரசுக்கு எதிராக இல்லை, அரசு என் சினிமாவுக்குள் வர வேண்டும். போன அரசு சினிமாவுக்குள் வரவே இல்லை. அவங்க சினிமாவுக்குள் வரவேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் பொதுப்பணித்துறையை கவனித்துக் கொண்டாலே போதும், எதுக்கு உங்களுக்கு சினிமா துறை வேணும். சினிமாத்துறை சினிமா துறையாகவே இருக்க வேண்டும் என்றார்.

சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. நேரடியாக அரசியல் களத்தில் இறங்குவீர்களா? என்று கேட்கிறீர்கள். இறங்க வேண்டுமா, இல்லையா என்று மக்கள் சொல்ல வேண்டும். இறங்க வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்து விட்டால், வேறு வழியில்லை. தூத்துக்குடியில் ஒரு கிராமத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, இதை நினைக்கும் போது அசிங்கமாக இருக்கிறது. இது போன்று இல்லாமல் இருந்தால் நடிகர்கள் அனைவரும் நடிகர்களாகவே இருந்துவிடுவோம். நாங்க ஏன் அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்று நினைக்கிறோம் என்று அந்த பேட்டியில் விஷால் பேசி இருந்தார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours