‘டிராப் சிட்டி’ படம் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் நடிகர் யோகி பாபு.
நெப்போலியன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குநர் டெல் கே. கணேசன், தற்போது யோகி பாபுவை அவரது புதிய படத்தில் நடிக்க வைக்கிறார். நடிகர் நெப்போலியனை ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய அவர், புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரையும் ஹாலிவுட்டிற்கு தனது திரைப்படங்கள் மூலம் அழைத்து சென்றார்.
அவரது அடுத்த படைப்பான ‘டிராப் சிட்டி’யில், தமிழ் நகைச்சுவை நட்சத்திரம் யோகி பாபுவை இதுவரை கண்டிராத பாத்திரத்தில் ஹாலிவுட்டுக்கு கணேசன் அறிமுகப்படுத்துகிறார். இதில் யோகி பாபு ஆங்கில ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடியிருக்கிறார். ‘ட்ராப் சிட்டி’ படத்தில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே ’ஜீஸி’ ஜென்கின்ஸ், யோகி பாபு, நெப்போலியன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசைத்துறையின் பின்னணியில் கருத்தை சொல்லும் படமாக இது உருவாகி வருகிறது. சவாலான இசை துறையில் ஒரு இளம் கலைஞனின் போராட்டத்தை திரைப்படம் காட்டுகிறது.
+ There are no comments
Add yours