கடைசி வரை நிறைவேறாமலே போன விஜயகாந்தின் ஆசை!

Spread the love

நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி மறைந்தார். இவரது இறப்புக்கு பலரும் இப்போது வரை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, அவரை நல்லடக்கம் செய்த தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களும், திரைப்பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தின் போது அவரது மகன்கள் சண்முகபாண்டியனும் விஜய பிரபாகரனும் அடர்த்தியாக முடி வளர்த்திருந்ததைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக அவரது இளையமகன் சண்முகப் பாண்டியன் நீண்ட முடியும் அடர் தாடியும் வைத்திருந்தார். இதுகுறித்தானத் தகவல்தான் தற்போது வந்துள்ளது.

இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் அவர் ‘குற்றப்பரம்பரை’ என்ற வெப்சீரிஸில் நடிக்க இருந்தார். இதற்காகத்தான் அந்த கெட்டப்பில் இருந்தார். அதில் அவர் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் வையத்துரையுடையது. இதனை விஜயகாந்திடம் அப்போது சொன்னபோது, இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும் என விரும்பி வலியுறுத்தி இருக்கிறார் விஜயகாந்த். அந்தக் கதாபாத்திரத்திற்கான டெஸ்ட் ஷூட் புகைப்படங்களையும் பார்த்து மகிழ்ந்திருக்கிறார் விஜயகாந்த். ஆனால், இதன் படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன்பே அவர் மறைந்ததுதான் சோகம். சண்முக பாண்டியன் இப்போது ‘படைத்தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours