நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் கடந்த மாதத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சி பல்வேறு குளறுபடிகளுடன் நடந்து முடிந்தது. இதனால் எழுந்த சர்ச்சை காரணமாக அதன் பிறகு ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. மேலும், சமீபத்தில் நடந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசைநிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது காவல்துறை.
இந்த இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் மட்டுமல்லாது, பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதில் ஹாரிஸின் ஆஸ்தான இயக்குநரான கெளதம் மேனனும் ஒருவர். இவர் கீர்த்தி சுரேஷிடன் இணைந்து இந்த இசைநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டுள்ளார். மேடையில், ஹாரிஸ் ஜெயராஜ் பாடிக் கொண்டே நடனம் ஆட கீழே ரசிகர்களுடன் இணைந்து கெளதமும், கீர்த்தியும் குத்தாட்டம் போட்டுள்ள இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours