தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்த நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தேடுத்து நடித்து வருகிறது. இவரது நடிப்பில் தற்போது ‘அமரன்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீப காலமாக தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருவது, அவரது ரசிகர்கள் இடையில் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது தனக்கென ஒரு மார்கெட் வைத்துக்கொண்டு உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர் ஹிட்டடித்து வருகின்றன. எஸ்கேவும் கவனமாக தனது அடுத்ததடுத்த படங்களின் ஸ்கிரிப்ட்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்க போவதால் சினிமாவை விட்டு விலக போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களின் பணிகளை முடித்து விட்டு முழுநேர அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளார். இதனால் அடுத்த தளபதி யார் என பேச்சு சோஷியல் மீடியாவில் எழத்துவங்கியது.
சிவகார்த்திகேயன் அடுத்து விஜய் என்று பலரும் கூற ஆரம்பித்தனர். அதற்கேற்ப எஸ்கேவும் தனது அடுத்தடுத்து விஜய் பட இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார். அமரனை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எஸ்கே தான் அடுத்த தளபதி என அவரது ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவது அவரது ரசிகர்கள் இடையில் கடும் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ‘அமரன்’ டைட்டில் டீசர் வெளியான சமயத்தில் அதில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து இருப்பதாகவும், எஸ்கே கெட்ட வார்த்தை பேசியுள்ளதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆங்காங்கே படத்திற்கு எதிராக போராட்டங்களும் நடந்தன.
இந்நிலையில் அண்மையில் விருது வழங்கும் விழா ஒன்றில் ‘அனிமல்’ படத்தையும் அதன் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவையும் புகழ்ந்து பேசியிருந்தார் சிவகார்த்திகேயன். பொதுவாகவே சந்தீப் ரெட்டி வங்கா பெண்கள் மீதான வன்முறைகளை ஹீரோயிசமாக காட்டுவதாக ஒரு சர்ச்சை உள்ளது. ‘அனிமல்’ படமும் அதுபோல ஏற்கப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களையும், எதிர்ப்பையும் சம்பாரித்தது. திரையுலகை சார்ந்தவர்களே ‘அனிமல்’ படத்தை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
இந்நிலையில் ‘அனிமல்’ படம் பயங்கரமாக இருந்ததாகவும், அதைவிட சந்தீப்பின் நேர்காணல்கள் நன்றாக இருப்பதாகவும் பேசியிருந்தார். இதனால் நெட்டிசன்கள் பலரும் சோஷியல் மீடியாவில் சிவகார்த்திகேயனை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி அடுத்த விஜய் என சொல்லப்பட்டதில் இருந்து எஸ்கே தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours