இந்த காக்க கழுகு Story பேசும் கதையை இன்றே நிறுத்திவிடுங்கள் ரஜினிக்கு விஜய் போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இளம் கதயநாயகர்கள் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் இருபவர்க்ள விஷ்ணு விஷால், விக்ராந்த். இவர்களின் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அன்புமகளான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமே ‘லால் சலாம்’
கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அழகான விண்டஜ் காரில் கெத்தாக வந்து இறங்கிய சூப்பர் ஸ்டாரை அனைவரும் கரவோசம் எழுப்பி வரவேற்றனர் .
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கூறிருப்பதாவது :
ஜெய்லர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவின் போது நான் பேசிய கழுகு காக்கா Story தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விவாதம் ஆனதை நினைத்து வருந்துகிறேன்.
ரஜினிக்கு விஜய் போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை; விஜய்க்கு ரஜினி போட்டி என அவர் நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை. விஜய்க்கு போட்டி விஜய்தான் என்று அவரே சொல்லியிருக்கிறார். விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். விஜய்க்கு 13, 14 வயதிருக்கும் போது ஷூட்டிங் பார்த்துட்டிருந்தாங்க. ஷுட் முடிஞ்சதும் சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார்.
என் பையன். நடிப்புல ரொம்ப ஆர்வம் இருக்கு. படிச்சுட்டு வந்து ஆக்ட் பண்லாம் என்று நீங்க சொல்லுங்க சார் என்றார். அப்ப விஜய்ட்ட நல்லா படிப்பா. அதுக்கப்புறம் நடிகர் ஆகலாம் என்று சொன்னேன். அதுக்கப்பறம் விஜய் நடிகர் ஆகி, படிப்படியா அவருடைய, திறமை, மற்றும் உழைப்பால் இப்ப உயர்வான இடத்தில இருக்கிறார். அடுத்ததாக அரசியலுக்கு போக இருக்கார்.
இப்ப வந்துட்டு எனக்கும் விஜய்க்கும் போட்டினு சொல்றது ரொம்ப கஷ்டமா இருக்கு என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours