பெங்களூரு குண்டுவெடிப்பு பின்னணியில் பாகிஸ்தான்!

Spread the love

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதியின் சதி இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1-ம் தேதி குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த முக்கிய குற்றவாளிகளான அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாஜிப் ஆகியோரை கொல்கத்தாவின் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாஜிப் ஆகியோருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளதாக என்ஐஏ கண்டறிந்துள்ளது. குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட அப்துல் மதீன் தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாஜிப் ஆகியோர் பாகிஸ்தானின் கர்னல் என்ற குறியூட்டு பெயருடன் தொடர்புடையவர்கள் என்பது தற்போது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி 2019-2020-ம் ஆண்டு முதல் அவர்கள் முதல் அவர் ஐஎஸ்-அல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்பில் இருந்ததாக என்ஐஏவுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2022-ம் ஆண்டு மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பிலும் கர்னல் என்ற குறியீட்டுப் பெயருடைய சந்தேகநபர் தொடர்புபட்டுள்ளதாக என்ஐஏ உயர் அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மங்களூர் குக்கர் குண்டுவெடிப்புக்குப் பிறகு, அபுதாபியில் உள்ள கர்னல் என்று சந்தேகிக்கப்படும் பயங்கரவாதியின் பெயர் தெரியவந்தது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பு வைத்துள்ள அவர், இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். இஸ்லாமிய அரசின் சிறு குழுக்களை உருவாக்கி, உள்ளூர் இளைஞர்களை அவற்றில் சேர்ப்பதே அவரது வேலையாக இருந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் இதுபோன்ற சிறு குழுக்களை உருவாக்கி, அதில் இளைஞர்களைச் சேர்த்து இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதுதான் அவரது திட்டம். கடந்த மார்ச் 1-ம் தேதி ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பிலும் இவர் இருந்ததாக என்ஐக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, வழக்கு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours