புலியின் நடமாட்டம் கருதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து!

Spread the love

கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி பகுதியில் கன்றுக்குட்டி ஒன்றை மர்ம விலங்கு கடித்துக் குதறி, கொன்றுள்ளதால் மீண்டும் புலி நடமாட்டம் இருப்பதாக பொது மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இதனால் இன்று நடைபெற இருந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான்பத்தேரி என்கிற பகுதியின் அருகே வக்கேரி பகுதியில் கடந்த டிசம்பர் 9ம் தேதி, விவசாயி ஒருவரை புலி ஒன்று அடித்துக் கொன்றது. புலி தின்றது போக விவசாயி சடலத்தின் எச்சங்கள் மீட்கப்பட்டன.

இதனையடுத்து ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பேரில் கேரளா அரசும் புலியை சுட்டுக் கொள்ள உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வனத்துறையினர் டிராப் கேமராக்கள் மூலம் நடத்திய கண்காணிப்பில், அது wwl45 என்ற புலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த வாரம், புலி வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போதும், காயமடைந்திருந்த புலியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு சென்று, திருச்சூரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது 8 மாத கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் கட்டப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கிருந்த கால் தடங்களை வைத்து ஆய்வு செய்த போது, அது புலி என்பது உறுதியானது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இன்று இரவு கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், மனந்தவாடி பகுதியில் உள்ள 162 தேவாலயங்களிலும் இரவு சிறப்பு ஜெபக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. புலியின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, வனத்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கடந்த பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்ட வந்த இந்த நள்ளிரவு சிறப்பு ஜெபக்கூட்டங்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தேவாலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours