2 ஆம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த பள்ளி நிர்வாகம்

Spread the love

உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராசில் 2ஆவது படிக்கும் மாணவரை பள்ளி நிர்வாகமே நரபலி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில், ‘டி.எல். பப்ளிக் பள்ளி’ இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் ஜசோதன் சிங். அவரது மகன் தினேஷ் பாகல் அந்த பள்ளியின் இயக்குநராக உள்ளார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 2ஆம் வகுப்பு மாணவரான க்ரிடார்த் என்பவரின் தந்தைக்கு, பள்ளி நிர்வாகம் தொடர்புகொண்டு, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், பள்ளியின் இயக்குநர் காரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்து வந்த தந்தைக்கு, க்ரிடார்த் இறந்துவிட்டார் என கூறப்பட்டுள்ளது. சந்தேகமடைந்த தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. ஜசோதன் சிங்க்கு சூனியம் மற்றும் நரபலிகளில் நம்பிக்கை உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காக அந்த சிறுவனை நரபலி கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சிறுவனை கொல்வதற்காக அவரை விடுதியிலிருந்து பள்ளி இயக்குநர் வெளியே அழைத்து வந்தபோது, அந்த சிறுவன் கத்தியுள்ளார். அந்த சிறுவன் சத்தம் போடுகிறார் என்பதற்காக அந்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்கள். இந்த தகவல்கள் கிடைத்ததையடுத்து, ஜசோதன் சிங், தினேஷ் பாகல் மற்றும் 3 ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி வேறு ஒரு சிறுவனை நரபலி கொடுக்க இவர்கள் திட்டமிட்டதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டதாகவும் குற்றவாளிகள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours