ராய்ப்பூர்: நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் அவசர அவசரமாக ராய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.
187 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் இண்டிகோ விமானம் நாக்பூரில் இருந்து இன்று (நவ.14) காலை கொல்கத்தாவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட நிலையில், அதில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்ததாகவும், இதையடுத்து விமானம் அவசர அவசரமாக சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டு அங்கு தரையிறக்கப்பட்டதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் தெரிவித்துள்ளார்.
காலை 9 மணிக்குப் பிறகு ராய்ப்பூரில் விமானம் தரயிறங்கிய நிலையில் உடனடியாக அது கட்டாய பாதுகாப்பு சோதனைகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார். தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் விமானத்தை முழுமையாக சோதனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours